Published on 01/12/2020 | Edited on 01/12/2020

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தையுமான, சிவக்குமாருக்கு கரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை, தனது சென்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில், நடிகர் சிவக்குமாரின் புதிய செல்பி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சிவகுமாருக்கு செய்யப்பட்டது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் எனவும், கரோனா பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் என்றே வந்ததாகவும் தெரிவித்துள்ள அவரது தரப்பு, சிவக்குமாருக்கு கரோனா தொற்று என்பது வெறும் வதந்தி என விளக்கமளித்துள்ளது.
நடிகர் சிவக்குமாருக்கு, கரோனா இல்லை என்ற தகவல், அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.