Skip to main content

‘பைரதி ரணகல்’ பட ஓ.டி.டி.யில் புது அப்டேட்

Published on 03/03/2025 | Edited on 03/03/2025
bhairathi ranagal now avalilable in tamil and malayalam in ott

கீதா பிக்சர்ஸ் சார்பில்,  தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், பிரபல கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைரதி ரணகல்'. இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 

மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இப்படம், கன்னட மொழியில், திரையரங்கில் வெளியானதை தொடர்ந்து, ஓடிடி-யிலும் வெளியானது. இந்த நிலையில் இப்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்