![Sivakarthikeyan](http://image.nakkheeran.in/cdn/farfuture/YtuFqlhehWebJnI1YuXCYhSkHXCEQSZpOzRn_Ur6bV8/1614665543/sites/default/files/inline-images/sivakarthikeyan_24.jpg)
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், வேறு சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/IyvvvhKqliFQcVk8rx-8BSpqeHOfhT5FRaTDh19Qioc/1614665710/sites/default/files/inline-images/article-inside_1.png)
தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டதையடுத்து, மார்ச் 5-ஆம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்த செல்வராகவன் ரசிகர்கள், படத்தின் வெளியீட்டை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி சிறு முன்னோட்டமாக நேற்று (01.03.2021) வெளியிடப்பட்டது. இக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைக் கண்டு பிரமித்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணை சிறப்பாக உள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு வாழ்த்துகள். ‘டேய் சும்மா இருடா...’ செம்ம சார் நீங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.