Published on 18/05/2020 | Edited on 18/05/2020
![gds](http://image.nakkheeran.in/cdn/farfuture/G3dvhoRo_xyTe87uEjCRqOAP2NAAfcKSuTgj8wWNMb8/1589802441/sites/default/files/inline-images/Untitled_66.jpg)
கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை 11,000த்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சமீபத்தில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவானதற்கு நடிகர் கார்த்தி பாராட்டிய நிலையில், தற்போது இதேபோல் திருப்பூர் மாவட்டமும் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சமூகவலைதளத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்... ''இது தொடரட்டும் கலெக்டர் சார். இதற்காக அயராது உழைக்கும் ஒவ்வொருவரும் நமது மரியாதைக்கு தகுதியானவர்கள்'' என வாழ்த்தியுள்ளார்.