சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் மிஸ்டர் லோக்கல். எஸ்.எம்.எஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். வழக்கமான கதை, காமெடி என்று வழக்கமான ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது என்று கலவையான விமர்சனத்தை இப்படம் பெற்றுள்ளது.
![siva](http://image.nakkheeran.in/cdn/farfuture/1fAFmeYpSq6JNeIPpfaMjWubUS518WvnQt8f_iJGA7A/1558161118/sites/default/files/inline-images/siva_26.jpg)
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ திரைப்படம் வெளியானபோது, அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையானது. இதன் பின் என்னுடைய ட்விட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று பதில் தெரிவித்தார்.
![natpuna ennanu theriyuma](http://image.nakkheeran.in/cdn/farfuture/d3gAjP0t5dFuz69VJ4zGqIQWgY7COa0eLlZGIDqlWtg/1558161152/sites/default/files/inline-images/336x-105_1.png)
மீண்டும் அருண்விஜய் ட்விட்டரில் மிஸ்டர் லோக்கல் படத்தை மறைமுகமாக கலாய்த்துள்ளதாக அவர் போட்ட ஒரு பதிவின் மூலம் சொல்கின்றனர். கிண்டல் செய்யும் விதமாக ஒரு வாயை மூடும் ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என சிவாவின் ரசிகர்கள் கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.