மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
![siva](http://image.nakkheeran.in/cdn/farfuture/rAMvfz2xy2POvNYLu02XLlRCpqTz8-1QRGC_7L1kJCU/1562830402/sites/default/files/inline-images/siva-k_1.jpg)
இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பல திரை பிரபலங்கள், இந்திய அணிக்கு ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், “எந்த ஒரு அணியும் 3 விக்கெட்டுக்கு 5 ரன்கள் என்ற நிலையிலிருந்து போராடி மீண்டிருக்காது. ஆனால் நாம் செய்திருக்கிறோம். வரலாறு எப்போதும் போராளிகளைத்தான் நினைவில் கொள்ளும். தோனியையும் ஜடேஜாவையும் எண்ணி பெருமை கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் ரோஹித் சர்மாவுக்கும், பும்ராவுக்கும் பரம விசிறி. அச்சமில்லா கேப்டன் கோலிக்கு ஒரு சபாஷ் ” என்று பதிவிட்டுள்ளார்.