
ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது, நடிகர் கார்த்தியின் 19-வது படமாகும். திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட, கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு, மொத்த காட்சிகளையும் படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழு.

பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியான படத்தின் டீசருக்கும், பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியான ‘ஜெய் சுல்தான்’ என்ற பாடலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, “யாரையும் இவ்ளோ அழகா...” எனத் தொடங்கும் பாடல் இன்று (05.03.2021) இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது. விவேகா எழுதியுள்ள இப்பாடலை, நடிகர் சிம்பு பாடியுள்ளார்.