ரஜினி, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா சரண். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தார். குறிப்பாக விக்ரமனின் கந்தசாமி படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி, பட வாய்ப்புகளை அள்ளிக்குவித்தார். ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்வியால் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் பட வாய்ப்புகள் இல்லை.

தற்போது ரீஎண்ட்ரி கொடுக்கும் வகையில் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில் விமலுடன் அவர் நடிக்கும், 'சண்டகாரி - தி பாஸ்' படமும் ஒன்று. இந்த படத்தை ஆர்.மாதேஷ் இயக்குகிறார். தற்போதைய டிரெண்டில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தான் நடிகைகள் வாய்ப்பு தேடி வருகின்றனர். ஆனால் நடிகை ஸ்ரேயா ஏற்கனவே எல்லையற்ற கவர்ச்சியை காட்டியவர். எனவே தற்போது வித்தியாச முறையாக, ஒரு ஹாட் நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.