'மீடூ' மூவ்மென்ட் மூலம் பல்வேறு நடிகைகள் பாலியல் புகார்கள் கூறிவரும் நிலையில் ஹிந்தி நடிகையும், ஹிந்தி பிக்பாஸ்11வது சீஸனின் வெற்றியாளருமான ஷில்பா ஷிண்டேவும் தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளார். சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து அவர் பேசும்போது... "மீடூ வில் பாலியல் பற்றி பேசுவது அபத்தமாக உள்ளது. பாலியல் தொல்லையில் சிக்கினால் அப்போதே சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் கழித்து தாமதமாக குரல் கொடுத்தால் யாரும் கேட்கப்போவது இல்லை. எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் சினிமா துறையின் பெயரை மட்டும் கெடுப்பதுபோல் பேசுகிறார்கள். சினிமா துறை மோசமானது அல்ல. நல்ல துறைதான். சினிமா துறையில் இருக்கும் எல்லோரும் மோசமானவர்கள் இல்லை. இங்கு நடப்பது கொடுத்து வாங்குவது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. சினிமாவில் பாலியல் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எல்லாமே இருதரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விலகிவிட வேண்டும். அதை விட்டு புகார் தெரிவிப்பது முறையல்ல" என்றார்.