Skip to main content

"அட்டகாசமான விஜய் சேதுபதி; மரண மாஸ் அட்லீ" - தமிழில் பேசி அசத்திய ஷாருக்கான்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

sharukhan speech at jawan event

 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜவான்'. முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் ஒரு முன்னோட்ட நிகழ்வு நடந்தது. இதில் ஷாருக்கான், அட்லீ, ப்ரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் வந்து படக்குழுவினரை வாழ்த்தினார். 

 

பின்பு ஷாருக்கான் பேசுகையில், ஆங்கிலத்தில் பேசிய அவர், "அட்லீ என்னிடம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என சொன்னார். நான் இதுவரை இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் என் வாழ்க்கையில் கலந்து கொண்டதில்லை. தமிழ் திரையுலகில் சிறந்த படங்கள் வருவதை நான் முன்னதாக அறிந்து கொண்டேன். என்னுடைய முதல் தமிழ் பட அனுபவம் 'உயிரே' படத்தில் நடந்தது. அதன் பின்பு அற்புதமான மனிதர் கமல்ஹாசன் இயக்கிய 'ஹே ராம்'. அந்த படத்தில் தமிழில் ஒரு வசனம் பேசியிருக்கேன். அதுதான் முதலும் கடைசியுமாக நான் தமிழில் பேசியது. அதன் பிறகு 'ரா.1' படத்தில் ஒரு ஷாட்டிற்காக ரஜினி சாரை பார்த்தேன்" என்றார். பின்பு படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என பலருக்கும் நன்றி தெரிவித்தார். அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்தார். 

 

தொடர்ந்து பேசிய அவர், "அட்லீயை தமிழில் புகழ வேண்டும் என்றால் மரண மாஸ். ஒளிப்பதிவாளர் விஷ்ணு, ஒளிமயமானவர். தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் கம்பீரமானவர். படத்தொகுப்பாளர் ரூபன் விறுவிறுப்பானவர். விஜய் சேதுபதி அட்டகாசமானவர். அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படத்தில் பணிபுரிந்த தமிழ் கலைஞர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டதை தமிழ் மக்கள் முன்னால் காட்டியுள்ளேன். படத்தை பார்த்து நான் தமிழ் கலைஞர்களிடம் எவ்வளவு கற்றுக்கொண்டேன் என்பதை சொல்லுங்கள். அனிருத் வித்தைக்காரன். அவர் என் மகன் போன்றவர். 

 

நடன அமைப்பாளர் ஷோபி, என்னை பயங்கரமாக நடனமாட வைத்துள்ளார். அவரிடம் நான் சொன்னேன்... என்னால் ரஜினி சார், விஜய் சார் போல் நடனமாட முடியாது என்று. சோபிக்கு எனது நன்றி. அவர் ஆட்டம் போடுபவர். ஸ்டண்ட் இயக்குநர்கள் அனல் மற்றும் அரசு, அவர்கள் நெருப்பானவர்கள். யோகிபாபு கலகலப்பானவர். நயன்தாரா வசீகரமானவர்" என்றார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்கள் தான் ஒரிஜினல்” - வைரல் வீடியோ குறித்து ஷாருக்கான் - மோகன்லால்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sharukhan mohan lal conversation about mohan lal viral dance video

கேரளா கொச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டார். அதில் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து ‘ஹுக்கும்...’ பாடலுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து ‘ஜிந்தா பந்தா...’ பாடலுக்கும் மேடையில் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மோகன்லால் ரசிகர்களோடு இணைந்து ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் ஷாருக்கான் மோகன்லால் நடன வீடியோ குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் சரிபாதி அளவு நன்றாக நடனமாடியிருப்பேன் என விரும்புகிறேன். லவ் யூ சார். உங்கள் வீட்டு டின்னருக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா” எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஷாருக்கான் பதிவிற்கு தற்போது மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டியர் ஷாருக்கான். உங்களைப் போல் யாராலும் நடனமாட முடியாது.  உங்களது ஒப்பற்ற  உன்னதமான ஸ்டைலில் நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வெறும் டின்னர் மட்டும் தானா? பிரேக் ஃபாஸ்ட் கூடாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கத்தில் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார்.   

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.