கடந்த 1993ஆம் ஆண்டு 'ஜென்டில்மேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். இப்படம் வெளியாகி நேற்றுடன் 25 ஆண்டுகளை நிறைவடைந்தது. மேலும் இயக்குனர் ஷங்கர் திரையுலகிற்கு அறிமுகமாகியும் 25 ஆண்டுகளாகியுள்ளதை கொண்டாடும் விதமாக சங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த அனைவருமே ஒன்றிணைந்து சென்னையில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் சங்கரிடம் ஆரம்பகால கட்டத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களிலிருந்து, இப்போது பணிபுரியும் உதவி இயக்குனர்கள் வரை கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் இதில் ஷங்கரின் உதவி இயக்குனர்கள் அனைவருமே ஷங்கரைப் பற்றி தனித்தனியாக எழுதி, அதனை ஒரு புத்தகமாக தொகுத்து அதனை பரிசாக வழங்கினார்கள். இதையடுத்து அனைவரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தன் உதவி இயக்குனர்களுடனான சந்திப்பு குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... “உதவி இயக்குனர்களின் அன்பால் நெகிழ்ந்துவிட்டேன். அவர்கள் அனைவரும் இல்லாமல் எனது பயணம் சாத்தியமில்லை” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.