விஜய் சேதுபதி அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் விஜய் சேதுபதியின் 25வது படமாக ‘சீதக்காதி’ உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். பாலாஜி தரணிதரன் இயக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்திற்கு தணிக்கை குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளதாக விஜய் சேதுபதி ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நீறு வெளியாகி வைரலாகி வருகிறது.