மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை இணைய தொடராக கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவின் இளமைகால பருவம், திரைப்படங்களில் நடித்த பருவம், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது முதல் இறந்தது வரை அனைத்தையும் படமாக்கி வருகிறார்.
![jaya](http://image.nakkheeran.in/cdn/farfuture/oHD12K2mt6H_I2Ec5iqWWVMO5ErIQdm3w-jnGnSfEXg/1567688317/sites/default/files/inline-images/freepressjournal_import_2017_02_SASIKALA-PTI12_6_2016-1.jpg)
![ddw](http://image.nakkheeran.in/cdn/farfuture/RRnwJ81K_Egnw1n9uKXAWpT3WrGseLccdY6wQLi9tWU/1567688472/sites/default/files/inline-images/Mhamuni-336x150_0_0.jpg)
இதில் ஜெயலலிதா குழந்தை கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார். இளமைப்பருவ கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சோபன்பாபு கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் நடிக்கிறார். ‘குயின்’ என்று பெயர் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் நடந்துவரும் நிலையில் சசிகலா கதாபாத்திரம் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.