வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சங்கத் தலைவன். இந்த படத்தை வெற்றிமாறன் தனது க்ராஸ்ரூட் கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார். எழுத்தாளர் பாரதிநாதன் எழுத்தில் உருவான தறியுடன் நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
மேலும் பிரபல தொகுப்பாளர் ரம்யா முதன்முறையாக ஹீரோயினாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பல வருடங்கள் கழித்து கருணாஸ் நடித்திருக்கிறார். அறம் படத்தில் நடித்து பிரபலமடைந்த சுனுலட்சுமி நடித்திருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் சமுத்திரக்கனி, வெற்றிமாறன், ரம்யா, கருணாஸ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சமுத்திரக்கனி, “வெற்றிமாறன் திடீரென ஒரு நாள் இரவு 12 மணிக்கு தொலைபேயியில் தொடர்புக்கொண்டு என்னை அழைத்தார். ‘எங்க இருக்கிங்க, ஆஃபிஸ் வரமுடியுமா?’ என்றார். நானும் உடனடியாக ஆஃபிஸுக்கு போனேன். அப்போதான் விசாரணை படத்தின் கதையை சொன்னார். நானும் உடனே சரி, சீக்கிரமே ஷூட்டிங் போய்விடலாம் என்று சொல்லிவிட்டேன். அப்படிதான் விசாரணை படத்தில் நடித்தேன். அதேபோலதான் இந்த படத்திற்கும் திடீரென கால் செய்து, இதை படமாக எடுக்க போகிறோம் என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். என்னோட மாப்பிள்ளை கருணாஸ் சொன்னார் என்னால்தான் இந்த படமே ஓக்கே ஆனது அப்படியெல்லம் பில்டப் செய்தார். அவ்வளவு பில்டப் எல்லம் இல்லை, வெற்றிமாறன் சார் குதி என்று சொன்னால் குதித்துவிடுவேன்” என்றார்.