திரை உலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் டிவைன் ப்ரோடக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கும் புதிய ஆந்தாலஜி படமான 'சில்லு கருப்பட்டி' படத்தை 'பூவரசம் பீ ..பீ ' படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்குகிறார். சமுத்திரகனி, சுனைனா இணைந்து நடிக்கும் இப்படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதில் ஒரு கதையில் சமுத்திரக்கனி - சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்து உள்ளனர்.
நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சராசரி தம்பதியனரின் வாழ்வியல் முறையை பதிவு செய்யும் அத்தியாயம் இவர்களுடையது. இவர்களுடன் 'ஓகே கண்மணி' படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும் ,தெய்வ திருமகள்,சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் ஒரு கதையிலும், நிவேதிதா சதிஷ் -மணிகண்டன் ஆகியோர் ஒரு கதையிலும் நடித்து உள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி யஙனமூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகிய நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் இதில் பணியாற்றி இருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.