நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த 'சர்கார்' பட விழாவில் தான் முதல்வரானால் முதல்வராக நடிக்க மாட்டேன் என பேசியது திரை துறை மட்டுமல்லாமல், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துகொண்ட போது விஜய் அரசியலில் நுழைவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்... நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைத்தே வகுத்துள்ளனர். உலகில் எந்த மூலையில் இருப்பவர்களும் ஒருமுறையாவது பாபநாசம் வரவேண்டும். மன மகிழ்வுக்கு ஜாதி, மத வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். நான் பல முறை காசிக்கு சென்றுள்ளேன், கைலாய யாத்திரையும் மேற்கொண்டுள்ளேன். நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தையும் பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி" என கூறினார்.