![sabhaapathy movie trailer trending on social media](http://image.nakkheeran.in/cdn/farfuture/6dXZWwrJMsPcoajF7eV8JpDS6JuUxRtzMxlnhnowk-o/1636603982/sites/default/files/inline-images/sabapathy.jpg)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்துவருகிறார், இவர் ‘இனிமே இப்படிதான்’, ‘தில்லுக்கு துட்டு’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'டிக்கிலோனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே நடிகர் சந்தானம், இயக்குநர் சீனிவாச ராவ் இயக்கத்தில் 'சபாபதி' படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ப்ரீத்தி வர்மா நடித்துள்ளார். ‘குக் வித் கோமாளி’ புகழ், எம்.எஸ். பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில், 'சபாபதி' படத்தின் ட்ரைலரைப் படக்குழு நேற்று (10.11.2021) வெளியிட்டது. காமெடி ஆக்சன் கலந்த இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் 'சபாபதி' படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் 1.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.