Skip to main content

கதையை கைமாற்றிய ஆமீர் கான்; சல்மானை இயக்கும் தமிழ்ப் பட இயக்குநர்

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

RS Prasanna to direct Salman Khan under Aamir Khan Productions

 

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆமீர்கான். ‘ஆமீர்கான் புரொடக்சஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ள ஆமீர்கான். அடுத்ததாக சல்மான் கானை வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சல்மான்கானிடம் ஆமீர்கான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

 

இப்படத்தை தமிழ்ப் பட இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முன்னதாக ஆர்.எஸ். பிரசன்னா ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானரில் ஒரு கதையை எழுதி ஆமீர்கானிடம் சொல்லியுள்ளார். கதையைக் கேட்ட ஆமீர்கான், இதில் தன்னை விட சல்மான்கான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து சல்மான்கானை அணுகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சல்மான்கான் தரப்பு இதற்கு என்ன பதிலளித்தார்கள் என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உறுதியாகும் பட்சத்தில் ஆமீர்கான் தயாரிப்பில் முதல் முதலில் நடிக்கவுள்ளார் சல்மான்கான். 

 

2013ல், லேகா வாஷிங்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'கல்யாண சமையல் சாதம்' படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா. இப்படத்தை தொடர்ந்து சின்மயா மிஷனின் நிறுவனர் சுவாமி சின்மயானந்தாவின் வாழ்க்கையை 'ஆன் ஏ குயிஸ்ட்' ( On a Quest) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு படம் எடுத்தார். பின்பு  'கல்யாண சமையல் சாதம்' படத்தையே இந்தியில் 'சுப் மங்கள் சாவ்தான்' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். 2017ல் வெளியான இப்படம் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்