நடிகர் விஜய் த.வெ.க. என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அதன் முதல் மாநாட்டை சமீபத்தில் நடத்தி கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார். இதையடுத்து அவரது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடு மீது பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பலரும் எதிர்வினையாற்றினார்கள்.
இதனிடையே விஜய்யின் அரசியல் வருகை குறித்து தொடர்ச்சியாக பல்வேறு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களிடம் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராதா ரவியிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “வசதி இருக்கிறவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பரிந்துரைக்கலாம். காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் அஸ்தமிக்கிறது. இதை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்குமென யோசிக்கலாம். ஆனால் அந்த இடத்தில் இருந்தால் தான் அதனுடைய வலி தெரியும்” என்றார்.