இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் படம் "ஆர்.ஆர்.ஆர்". 300 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.
நடிகர் ராம் சரணும், நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் "ஆர்.ஆர்.ஆர்" படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, உடன் சமூத்திரகனி நடிக்கின்றார். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர். இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் "ஆர்.ஆர்.ஆர்" திரைப்படம் 1920களின் பின்னணியில் உள்ள பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் நடைபெறுவதாக உள்ளது. இதில் கோமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில், பழங்குடியின மக்களுக்கான நியாயம் கேட்டு போராடும் தலைவராக ஜூனியர் என்.டி.ஆரும், பிரிட்டீஷாரை எதிர்த்து கலகத்தில் ஈடுபடும் அலுரி சீதாராம ராஜூ என்ற கதாபாத்திரத்தில் ராம்சரணும் நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.