Skip to main content

'இந்த படத்தை தீவிர அக்கறையோடு எடிட் செய்தேன்' - எடிட்டர் ரூபன்  

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
adangamaru

 

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த அடங்க மறு படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் குறித்து இப்பட எடிட்டர் ரூபன் பேசும்போது...

 

 

"அடங்க மறு' படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். வழக்கமாக, ஒரு படத்தின் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள், எடிட்டிங் டேபிளை அடையும் போது, காட்சியிம் உண்மையான உணர்வை கொடுக்க, பல கட்ட செயல்கள் தேவைப்படும். ஆனால், அடங்க மறு படத்தில் எடிட்டிங்கின் ஆரம்ப கட்டத்திலேயே அதன் முழு உணர்வையும் கொடுத்தது. என் மனதில் தோன்றிய  முதல் மற்றும் முன்னணி விஷயம், இந்த படத்தை தீவிர அக்கறையோடு எடிட் செய்ய வேண்டும் என்பது தான். ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி, குறிப்பாக, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் படம் நன்றாக வர பொறுமையாக இருந்ததற்கு நன்றி. மேலும் ஸ்கிரிப்ட் டேபிள்' அல்லது 'எடிட்டிங் டேபிள்' தான்  படத்தின் விதியை முடிவு செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் கார்த்திக்கின் சிறப்பான செயல்முறை என் வேலையை எளிதாக்கியது, அதே நேரத்தில், நல்ல அவுட்புட் கொடுக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் என வலுவாக நம்புகிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெயம் ரவி ரொம்ப டெரரான ஆளுன்னு நினைச்சேன்’ நடிகை ராஷி கண்ணா சிறப்பு நேர்காணல் (வீடீயோ)

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

இமைக்கா நொடிகள், அடங்க மறு திரைப்படங்களின் நாயகி நக்கீரனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் வீடியோ இணைப்பு.

Next Story

'என் ஸ்கிரிப்ட்டை ஜெயம் ரவி தான் மாற்ற வலியுறுத்தினார்' - 'அடங்க மறு' கார்த்திக் தங்கவேல் 

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
adanga maru

 

'அடங்க மறு' படத்தை நாளை டிசம்பர் 21ஆம் தேதி க்ளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் உலகெங்கும் வெளியிடுகிறது. ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங்கை கையாள, சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசும்போது....

 

 

"சுஜாதா மேடம் ஆரம்ப நிலையிலிருந்து எனக்கு மிகப்பெரிய  ஆதரவாக இருந்தவர். அவரின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் குழு மற்றும் அடங்க மறு படத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர்கள் இது ஒரு சரியான பொழுதுபோக்கு படம் என கூறுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயத்தில், எல்லா பாராட்டும் ஜெயம் ரவி சாருக்கே செல்ல வேண்டும். ஆரம்பத்தில், என் ஸ்கிரிப்ட் மிகவும் சீரியஸான ஸ்கிரிப்டாக இருந்தது, அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் விதத்தில் மாற்ற அவர் தான் தொடர்ந்து  வலியுறுத்தினார். அவருக்கு நிறைய கதைகள் காத்திருந்தன, அவர் நினைத்திருந்தால் இந்த ஸ்கிரிப்ட்டை எளிதில் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவர் என் கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு, எனக்கு உறுதுணையாக இருந்தார் என்பது நான் அவரிடம் வியந்த விஷயம். இது தான் ஒரு நல்ல படமாக மாற முக்கிய காரணமாகவும் இருந்தது. மேலும், இந்த படத்துக்காக ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் நம்பமுடியாத முயற்சியை மேற்கொண்டனர். அப்படிப்பட்ட நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் நான் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்" என்றார்.