Skip to main content

தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Release date of Dhanush movie announced

 

தனுஷ், தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இப்படத்தில் கதாபாத்திரத்தின் அறிவிப்புகளை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அதன் படி தனுஷ், படத்தின் தலைப்பான 'திருச்சிற்றம்பலம்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷி கண்ணா 'அனுஷா' என்ற கதாபாத்திரத்திலும், பிரியா பவானி ஷங்கர் 'ரஞ்சனி' என்ற கதாபாத்திரத்திலும், 'ஷோபனா' என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இதனையடுத்து பாரதி ராஜா 'சீனியர் திருச்சிற்றம்பலம்' மற்றும் பிரகாஷ் ராஜ் 'நீலகண்டன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

 

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். அதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய புது வீடியோ ஒன்றையும் தனுஷ் பகிர்ந்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்