Skip to main content

தாவூத் இப்ரஹிம் கதையை இயக்கும் ராம் கோபால் வர்மா!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

gdsd

 

ஆக்‌ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப் பின்னணி என பல்வேறு பின்புலங்களில் உணர்வுகளை தத்ரூபமாகவும், சில நேரங்களில் மிகவும் அப்பட்டமாகக் கொப்பளிக்கும் அளவுக்குப் படங்களைக் கொடுப்பவர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

 

இவர் தற்போது 'டி கம்பனி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் 'டி கம்பெனி' பற்றியதுதான் இத்திரைப்படம். தாவூத் இப்ரஹிம் 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தேடப்படும் முக்கியக் குற்றவாளி என்பது அனைவரும் அறிந்த கதையே. எல்லோருக்கும் தெரிந்த அந்தச் சம்பவத்தை நிழல் உலகத்தின் பின்னணியை சுவாரஸ்யம் குறையாமல் தத்ரூபமாகப் படமாக்கி 'டி கம்பனி' திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா.

 

கடந்த 2002-ல் 'கம்பெனி' என்றொரு திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கினார். இத்திரைப்படம் தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜன் பற்றி அரசல்புரசலாக வெளிவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

 

cc

 

இத்திரைப்படத்தில், பில் கேட்ஸ், திருபாய் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறும் தொட்டுச் செல்லப்படுகிறது. ஆனால், இப்போது உருவாகியுள்ள 'டி கம்பனி' திரைப்படமானது கராச்சியில் உள்ள தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜன் ஆகியோரின் நெருங்கியக் கூட்டாளிகள் சொன்ன உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி டிஜிட்டல் தளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

 

இந்நிலையில், ஃப்ர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. யுஎஃபோ மூவிஸ் இந்தியா லிமிடட் இத்திரைப்படத்தை 5 மொழிகளில்  வெளியிடவிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்