Skip to main content

டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - ரஜினி எச்சரிக்கை 

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
rajini

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள '2.0' படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்....

"நம் அன்புத்தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்க்கானும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப் படவேண்டும்.

1 திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே யாருக்கும் விற்கக்கூடாது. 

2 ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது.

இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என வெளியிட்டுள்ளனர். இத்தனை நாட்களாக ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில நிர்வாகிகள் 200 ரூபாய் டிக்கெட்டை, 2000, 3000 என்று விற்று வந்தனர். இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி மன்றத் தலைமையில் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்