![gsgs](http://image.nakkheeran.in/cdn/farfuture/kBOComEZ5oFAhpsDrrj2xtjKcUV1i1hGs1yyav50HbQ/1597060134/sites/default/files/inline-images/radhika-apte-the-underrated-actor-that-deserves-more-spotlight-in-bollywood.jpg)
பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த 'தோனி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ராதிகா ஆப்தே. பின்னர் ரஜினியின் 'கபாலி' மூலம் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தார். அதேபோல் ஹிந்தி படங்களிலும் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து அங்கேயும் பிரபலமான இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் நடிப்பு குறித்து பேசியபோது...
"நான் இங்கு புகழுக்காக இல்லை. நடிப்பின் மூலம் கிடைக்கும் கவனம் எனக்குச் சில சமயங்களில் பிடிக்கும். ஆனால், வெற்றி தோல்விகளை நான் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு நடிகருக்குப் பாராட்டுகள் வேண்டும். முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும். பாராட்டுகளை விரும்பும் அதே நேரத்தில் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு துவண்டு விடாமல் இருக்க வேண்டும். எனவே, என் அணுகுமுறையில் ஒரு சமநிலை உண்டு.
நான் இதற்கு முன்னால் செய்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து சவால் விடுக்கவே நினைக்கிறேன். சவுகரியமான ஒரு வட்டத்தில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.