Skip to main content

முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட 'ராதே ஷியாம்' படக்குழு

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

radhe shyam movie first song release update out now

 

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'ராதே ஷியாம்' படத்தின் 'ஆக்கூசிலே" என்ற முதல் பாடல் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

 

ராதே ஷியாம் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 14 ஆம் தேதி உலக முழுவதும் திரையரங்கில் வெளியாகும் என் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்