சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 'இது நடிகை ஸ்ரீரெட்டி, தன் காரை திருப்பும் இடம். ஆகவே இங்கு, எவரும் வாகனங்களை நிறுத்தாதீர்' என, வித்தியாசமான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் பேசிய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் கிடைத்து.

அந்த தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரம்யா என்ற பெண் இதுக்குறித்து கூறும்போது, "நடிகர், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியின் வீடு, இந்தப் பகுதியில் தான் இருக்கிறது. இவர், காரில் செல்லும் வழியில், குறிப்பிட்ட அந்த வளைவில் யாரேனும் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தால் அந்த வாகன உரிமையாளரை கடுமையாக அவர் திட்டுகிறார். இதனால் எங்களுக்கு அவமானமாக உள்ளது. அவரிடம் தகராறு செய்தால் போலீஸ், வழக்கு என்று போவார். அவரிடம் எதற்கு வம்பு என்று நாங்களே இந்த பகுதியில் அப்படி ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். இந்த பலகையை பார்க்கும் யாரும் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதில்லை' என்றார்.