![prakash raj condemned Gujrat gotra issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/jlOtuXCApl7Z0qzKFCEeurGHLOckLLd2Dyt8g4RMDjI/1660903910/sites/default/files/inline-images/1625.jpg)
திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வரும் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு அண்மையில் விடுவித்தது.
மேலும் பாஜக எம்.எல்.ஏ சி.கே ராவுல்ஜி அந்த 11 பேரும் குற்றம் செய்தார்களா என்று எனக்கு தெரியாது. சிறையில் அவர்கள் நன்னடத்தையுடன் இருந்தனர். அவர்கள் பிராமணர்கள், நன்மதிப்பு கொண்டவர்கள், யாரேனும் தவறான எண்ணத்தில் பழி சுமத்தியிருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இவரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பாலியல் குற்ற வழக்கில் சிக்கி விடுதலையான 11 பேரின் புகைப்படத்தை பகிர்ந்து, "தலைவர்கள் தங்கப்பதக்கம் வென்றவர்கள் வாழ்த்துவதில் மும்முரம் காட்டும் போது, அவர்களை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்தி வருகின்றனர்" என பதிவிட்டுள்ளார்.
While Supreme leader is busy congratulating gold medal winners … his men are busy garlanding and felicitating RAPISTS .. is this your #AmritKaal #justasking pic.twitter.com/UrEUcOa3DZ— Prakash Raj (@prakashraaj) August 19, 2022