ஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள 'அடங்க மறு' ஒரு எமோஷன் கலந்த ஒரு அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம். இந்தத் திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்து, இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணா இப்பட அனுபவம் குறித்து பேசியபோது....
"இது ஒரு எளிமையான விஷயம் அல்ல. உண்மையில், முதல் முறையாக நீதிமன்ற அறை செட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு பதட்டம் ஏற்பட்டது. என்ன தான் முன் தயாரிப்பு மற்றும் ஒத்திகைகள் பார்த்திருந்தாலும், படப்பிடிப்பு சூழ்நிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தின் சரியான கணிப்பை நாம் உணர முடியும். இந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி, உரையாடல் மற்றும் மேனரிஸம் ஆகியவற்றில் முழுமையான நேர்த்தி தேவைப்பட்டது. ரவி மற்றும் கார்த்திக் இருவருக்கும் நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். ரசிகர்கள் என் நடிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்" என்றார். 'அடங்க மறு' படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.