தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் பொன்னம்பலம். தற்போது பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் பிக்பாஸ் இரண்டாம் சீசனில் பங்குபெற்றார். கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்தார்.

நேற்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடியும் வாஜ்பாயின் பெரிய உருவ சிலை ஒன்றை திறந்துவைத்தார்.
அதேபோல நடிகர் பொன்னம்பலம் நேற்று தஞ்சையில் மரக்கன்றுகளையும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாஜ்பாயின் பிறந்தநாளை கொண்டாடினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பொன்னம்பலம், “மத்திய அரசு எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும், வயதிலும், அறிவிலும், ஆற்றலிலும் உலகமே போற்றுக்கூடிய தலைவர் பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது. அவர் சொல்வது தான் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் இந்திய குடிமக்கள் பாதுகாப்பாகவும் வெளிநாடு தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும்” என்றார்.