பேரன்பு படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் நடிகை அஞ்சலியிடம், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் சில கேள்விகளுடன் ஒர் உரையாடலை நிகழ்த்தினோம்.
நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு மறக்க முடியாத கதாபாத்திரம் என்றால் எது, மேலும் அந்த கதாபாத்திரத்தின் குணம் உங்களுக்கும் இருக்கிறது என்றால் எது ? a)கற்றது தமிழ் ‘ஆனந்தி’ b)அங்காடித் தெரு ‘கனி’ c)எங்கேயும் எப்போதும் ‘மணிமேகலை’ d)இறைவி ‘பொன்னி’ e)பேரன்பு ‘விஜி’
அங்காடித் தெரு கனி கதாபாத்திரம் கிட்டதட்ட என்னுடைய உண்மையான குணம். நான் ஒரு வாயாடி, தைரியமான பெண். மேலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. நான் பள்ளியில் படிக்கும்போது அங்காடித் தெருவில் மிரட்டுவதுபோல ஆண்களை மிரட்டியிருக்கிறேன். பள்ளியில் எனக்கு காதல் கடிதம் கொடுத்ததால் அவரை மிரட்டினேன்.
உங்களுடைய ரிசெண்ட் க்ரஷ் யாரு?
எனக்கு க்ரஷ் எல்லாம் இல்லைங்க, அதெல்லாம் அந்த நேரத்திலேயே ரசித்து முடிச்சிடனும்.
நீங்கள் எங்கு இருக்கும்போது, எதை செய்யும்போது ரசிப்பீர்கள்?
படபிடிப்பு தளம் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று, அதை தாண்டி என்றால் ஃபிட்னஸ்தான்.
உங்களை பற்றி நிறைய காஸ்ஸிப் வந்திருக்கும், அதில் எந்த காஸிப் உண்மையாகவே நடந்திருந்தால் செமயாக இருந்திருக்கும் என்று ஃபீல் செய்திருப்பீர்கள்?
மோஸ்ட்லி அப்படி எதுவும் இல்லை, பேட்ட படத்தில் நான் நடிக்க இருப்பதாக செய்திகள் எல்லாம் வந்தது. பலரும் என்னிடம் கூட கேட்டார்கள். எனக்கு தெரிந்தால்தானே சொல்ல முடியும் சத்தியமாக தெரியாது என்று அப்போது சொல்லிகொண்டு இருப்பேன். அந்த காஸிப்பை நான் ரொம்ப மகிழ்ந்தேன்.
நடிகர் ஜெய்யிடம் கார் ஓட்டும்போது குடித்துவிட்டு கார் ஓட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறீர்களா?
ஸ்கிப்
இறைவியில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தீர்கள், தற்போது சிந்துபாத் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறீர்கள். அவரை பற்றி யாருக்கும் தெரியாத ஒன்றை சொல்லுங்கள்?
அவர் நிறையா சாப்பிடுவார். என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தவுடனேயே முதலில் அஞ்சலீ!!!!! என்று ஒரு வித ராகத்துடன் கூப்பிடுவார்.