'மன்னர் வகையறா' படத்தையடுத்து நடிகர் விமல் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக மாறியுள்ளார். இவர் தற்போது 'கன்னிராசி', 'களவாணி 2' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டே எழில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமல் அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் போலீசாக நடிக்கும் விமலுடன் வைகை புயல் வடிவேலுவும் போலீசாக நடிக்கவுள்ளார். சுராஜ் இயக்கிய 'மருதமலை' படத்தை போலவே காமெடி கலந்து உருவாகும் இப்படத்தில் நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பார்த்திபன் வடிவேலுவுடன் இணையவிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 24ஆம் புலிகேசி பட விவகாரத்தில் வடிவேலு மீது ரெட் கார்ட் போட்டு நடிப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.