Skip to main content

மோடி வருகை! பிக்பாஸ் நடிகை எதிர்ப்பு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

fsfsf

 

பிரதமர் மோடி நாளை காலை சென்னையில் நடக்க இருக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 

 

அதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ‘அர்ஜூன்’ எனப் பெயரிடப்பட்ட பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியிலும், வட சென்னை - விமான நிலையம் மெட்ரோ சேவையைத் துவங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும், சென்னை கடற்கரை - அத்திப்பட்டு ரயில் நிலையங்ளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள, நான்காவது ரயில் தடத்தையும், மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையைத் துவங்கும் நிகழ்ச்சி போன்ற திட்டங்களைத் துவக்கிவைக்கும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

 

இதற்கிடையே பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்வது வழக்கம். அந்த வகையில், பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை ஓவியா, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூமர் அங்கிளான யோகிபாபு

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

yogi babu, oviya in 'boomer uncle' movie first looked released by sibiraj

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து கொண்டு வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் 'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்', போன்ற படங்களை இயக்கிய ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே அன்பு மற்றும் கார்த்திக் கே தில்லை தயாரிப்பில் ஸ்வதீஸ் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகிபாபுவுடன் இணைந்து ஓவியாவும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளளார். தர்மபிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 'காண்டிராக்டர் நேசமணி' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியானது. 

 

இந்நிலையில் இப்படத்திற்கு சில காரணங்களால் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்திற்கு 'பூமர் அங்கிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்போஸ்டரை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்போஸ்டரில் யோகிபாபு கையில் துப்பாக்கியுடனும், ஓவியா சூப்பர் ஹீரோ கெட்டப்பிலும் இடம்பெற்றுள்ளனர்.   

 

 

Next Story

யோகி பாபுவிற்கு ஜோடியாக ஓவியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

contractor nesamani

 

அன்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்கத்தில், யோகி பாபு நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘கான்ட்ராக்டர் நேசமணி'. இப்படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்க, சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (24.09.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது.

 

முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பை, சென்னை, பொள்ளாச்சி, கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பட பூஜை விழாவில் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.