நடிகர் நந்தா முதன்முதலாகத் தயாரிப்பாளராகக் களமிறங்கி லத்தி திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் தயாரிப்பாளராக அவருடைய பணி, படப்பிடிப்பு தளத்தில் விஷாலின் ஒத்துழைப்பு மற்றும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார். அவற்றிலிருந்து...
லத்தி திரைப்படத்தில் விஷால் என்னும் ஆக்சன் கதாநாயகன் நடிப்பதால் அதற்கேற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்க பீட்டர் ஹெயின் மாஸ்டர் படத்திற்குள் வருகிறார். இயக்குநர் புதியவர் என்பதால் டெக்னீசியன்களை அனுபவம் வாய்ந்தவர்களாகத் தேர்ந்தெடுத்தோம்.
ஆடியன்சோட பல்ஸ் விஷாலுக்குத் தெரியும். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே ஆன் ஸ்பாட்ல அவர் சில கரெக்சன்ஸ் சொல்வாரு. அது அப்போதைக்கு ஒரு மாதிரி இருக்கும். ஆனால், தியேட்டரில் ஆடியன்சோட ரெஸ்பான்ஸ் பார்க்கும்போது தான் நமக்கு தெரியும். அவர் செய்தது சரிதான் என்று.
ஒரு சண்டைக்காட்சியை இன்று எடுக்க வேண்டாம், நாளை எடுத்துக்கொள்ளலாம் என பாதியிலேயே கிளம்பிவிட்டார். மேலும், இதை ஒரே ஷாட்டில் எடுக்க ப்ளான் போடுங்க. எத்தனை கேமரா வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார். 10 கேமரா வைத்து சூட் பண்ணினோம். அதைத்தான் இப்போது திரையில் நீங்கள் பார்க்கிறீர்கள்.