![netflix](http://image.nakkheeran.in/cdn/farfuture/wavFWEPxZhutsGgJuqY-BPLilIIdEt3jjpxZM2qjDEE/1590206269/sites/default/files/inline-images/netflix_2.jpg)
உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் ஒன்று நெட்பிளிக்ஸ். இந்தியாவில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்க கடந்த இரண்டு வருடங்களாகப் போராடி வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமெங்கும் பொழுதுபோக்கு இடங்களான திரையரங்குகள், மல்டி ப்ளக்ஸுகள் மூடப்பட்டுள்ளன. ஒருசில நாடுகளில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, ஆனால், திரையிட்டால் அதைப் பார்க்க ரசிகர்கள் இல்லை. காரணம், கரோனா பீதி.
இந்நிலையில் 'நெட்பிளிக்ஸ்' தனது சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பைத் தெரிவித்துள்ளது. கடந்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களாக நெட்பிளிக்ஸ் சந்தாதாரராக இருந்துகொண்டு பயன்படுத்தாமல் இருப்பவர்களின் சந்தா இத்துடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது. அதாவது, இன்னாக்டிவ்வாக இருக்கும் நெட்பிளிக்ஸ் பயனாளர்களின் சப்ஸ்கிரிப்ஷன் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.