Skip to main content

"அவ்ளோ ஃபயர் இருக்காது" - கதாபாத்திரம் குறித்து நெல்சன்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

nelson speech jailer audio launch

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

 

இதில் நெல்சன் பேசுகையில், "இப்படத்தில் சிவராஜ் குமார் சார், ஜாக்கி ஷெராஃப் சார், மோகன்லால் சார் எல்லாருமே கேமியோ மாதிரிதான் பண்ணியிருக்காங்க. மல்டி ஸ்டாரர் சப்ஜெக்ட் கிடையாது. ஜாக்கி ஷெராஃப் சார் பார்க்கும் போது, இவரு நிஜமான ரவுடியோ என யோசித்தேன். அவரை மீட் பண்ணலாமா என கேட்டதற்கு ஃபார்ம் ஹவுஸ் வர சொன்னார். கதை பிடிக்கவில்லை என்றால் அங்கேயே கட்டி வச்சு அடிப்பாரா என பயந்தேன். பின்பு கதை சொல்ல ஆரம்பித்த பிறகு, குறுக்கிட்டு, 'ஹே... எது சொன்னாலும் ஓகே. ரஜினி சார் படம் தானே. நான் நடிக்கிறேன்' என இந்தியில் சொல்லிவிட்டார். 

 

அதே போல் சிவராஜ்குமார் சாரை பார்க்க போனேன். பீஸ்ட் ஷூட்டிங்கில் சாரை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அப்போது திடீர்னு வந்தார். பார்க்கும் போது நிஜமான கேங்ஸ்டர் நடந்து வருவது போலவே இருந்தது. அவருடைய படங்கள் நான் பார்த்தத்திலை. அதுக்கப்புறம் பார்த்தேன். அவருடைய லுக் ஸ்க்ரீனில் செம்மையா இருந்துச்சு. அதனால் அவரை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தேன். பிறகு கதை சொன்ன போது ஓகே சொல்வாரா இல்லையா என டவுட் இருந்தது. இதுவரை நான் கதை சொல்லி யாரையும் ஒத்துக்க வைக்கவில்லை. 

 

ரஜினி சார் பெயர் சொல்லி தான் ஓகே வாங்கினேன். அதே போல் மோகன்லால் சாரும். ரஜினி சாரால்தான் எல்லாரும் உள்ளே வராங்க. அதனால் அதை வச்சி அவுங்கள தவறாக பயன்படுத்திட கூடாது, சரியாக காமிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். என்னால் என்ன பண்ண முடியுமோ அதை பண்ணியிருக்கேன். படம் வந்த பிறகு பாருங்கள். 

 

ரம்யா கிருஷ்ணா மேம், அவரிடம் கதை சொல்ல போகும் போது, படையப்பா மாதிரி இருக்குமா என கேட்கக்கூடாது என நினைத்துக்கொண்டே போனேன். ஆனால் முதல் கேள்வியே அதுதான் கேட்டாங்க. படையப்பா வேறு. இதில் அவ்ளோ ஃபயர் இருக்காது. கொஞ்சம் மென்மையான கேரக்டர்" என்றார். மேலும் படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்