Skip to main content

பா. ரஞ்சித் படத்திற்கு 'ஏ' சான்று

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

Natchathiram Nagargiradhu gets A certificate

 

பா.ரஞ்சித், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி வரும் இப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலரில் வலியுடனான எதார்த்த காதலையும், தன்பால் ஈர்ப்பாளர்களின் காதலையும், ஆணவக்கொலைகளையும் பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. மேலும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரால் விவாதிக்கப்பட்டது.  இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்