Skip to main content

நந்திதாவின் சதுரங்கவேட்டை!

Published on 02/08/2018 | Edited on 04/08/2018

 

maniyarfamily

 

nandita

 

 

 

'அட்டக்கத்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நந்திதா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.  தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான 'எக்கடக்கி போத்தாவா சின்னவாடா'  என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கில் வெற்றிகரமான நடிகை என்று பெயர் பெற்றுள்ளார். மேலும் இவர் அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இது குறித்து தற்போது நந்திதா பேசும்போது.... "தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'சீனிவாசா கல்யாணம்' என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். குடும்ப பாங்கான படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில்ராஜுவின் இந்த படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் பல வீர தீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். தற்போது இந்த படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறேன். இதற்கு முன் 'சதுரங்க வேட்டை' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான டார்லிங் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'பிரேம கதாசித்திரம் 2' படத்திலும் நடித்து வருகிறேன். இதற்கான படபிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. தமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும், 'நர்மதா' என்ற படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாகவிருக்கிறேன்'' என்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக நடித்து வரும் நந்திதா தற்போது பிசியான நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ளார்.

 

 

 

b

 

 

சார்ந்த செய்திகள்