Skip to main content

"உங்களின் முன்முயற்சியைக் கண்டதில் மகிழ்ச்சி" - ஸ்ருதியை பாராட்டிய மகேஷ்பாபு!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
bhrsh

 

 

திரைத்துறையில் இருப்பவர்கள் அடிக்கடி குறிப்பிட்ட நடிகர்களை டேக் செய்து சேலஞ்ச் விடுப்பது வாடிக்கையான ஒன்று. சேலஞ்ச் விடுக்கப்பட்ட பிரபலமும் அதை செய்து முடிப்பார்கள். இது அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று ஒன்றை தன் வீட்டில் நட்டார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அவர் நடிகர் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்களை டேக் செய்து இதனைத் தொடர்ந்து நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

 

அதனை மெய்ப்பிக்கும் வகையில் நடிகர் விஜய் மற்றும் நடிகை சுருதிஹாசன் தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்து அவரது வேண்டுகோளை நிறைவேற்றினார்கள். இதில் ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் "உங்கள் செயலை பாராட்டுகிறேன் ஸ்ருதி ஹாசன். ??? வேகத்தை அதிகரிக்கும் உங்களின் முன்முயற்சியைக் கண்டதில் மகிழ்ச்சி" என நடிகர் மகேஷ் பாபு ஸ்ருதிஹாசனை பார்ட்டி புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளார். இதை கண்ட ஸ்ருதிஹாசன், நிச்சயமாக என் பாக்கியம் சார்! என்னை பரிந்துரைத்ததற்கு மீண்டும் நன்றி?" என பதில் கமெண்ட் செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்