Skip to main content

தளபதி 66... விஜய்யுடன் நடிக்க ஓகே சொன்ன சூப்பர் ஸ்டார்!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

mahesh babu guest role vijay starring thalapathy66 film

 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு  நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தளபதி 66 படத்தில் கௌரவ தோற்றத்தில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க இயக்குநர் வம்சி அணுகியதாகவும், அதற்கு அவரும் ஓகே சொல்லி உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தெலுங்கு திரையுலகில் வம்சியும், மகேஷ் பாபுவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்களது கூட்டணியில் வெளியான மகரிஷி படம் பெரும் வெற்றி பெற்றதோடு இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்