
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் மஹத் ராகவேந்திரா, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும், மஹத் இன்னும் இந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நடிகர் மஹத் ராகவேந்திரா 'ஈமோஜி' எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் கதாநாயகிகளாக தேவிகா சதீஷ் மற்றும் மானசா இருவரும் நடிக்க ஆடுகளம் நரேன், வி.ஜே ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருமண தம்பதிகள் இடையே ஏற்படும் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து 'ஈமோஜி' வெப் தொடரை சென் எஸ் ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.