Skip to main content

'படை இருந்தும் பயந்த சனம்' - வடிவேலு குரலில் வலியை எடுத்துரைக்கும் 'மாமன்னன்'

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

maamannan raasakannu first single released

 

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ், "தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும்" எனப் பேசினார். 

 

உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. மேலும் ஜூன் மாதம் படம் வெளியாகும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 8 ஆம் தேதி ஏ.ஆர். ரஹ்மானுடன் வடிவேலு மற்றும் படக்குழு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு ஒரு பாட்டு பாடியுள்ளதாகத் தெரிவித்தனர். 

 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பார்க்கையில் சேலம் பகுதியில் அம்மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் பாடலாக அமைந்துள்ளது. வடிவேலுவின் குரல் அந்த வலியை எடுத்துரைக்க பக்கபலமாக இருக்கிறது. 

 

மேலும் யுகபாரதி வரிகளில், 'தவுளெடுத்த தாளம் அடி ராசா... குச்சிக்குள்ள கிடந்த சனம்... கோணி சாக்குல சுருண்ட சனம்... படை இருந்தும் பயந்த சனம்..." என வரும் வரிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பாடல் தற்போது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. 

 

 


 

சார்ந்த செய்திகள்