Skip to main content

கூலி பட அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்

Published on 06/11/2024 | Edited on 06/11/2024
lokesh kanagaraj about coolie release plan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

இதையடுத்து இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்திலும் கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக அறிவித்திருந்தனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நகர்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்தது. இது தொடர்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு ரஜினி இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் பிளான் குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய அவர், “படத்தை 2025ஆம் ஆண்டு கோடையில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பை 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிக்கவுள்ளோம். படம் ஒரு சிறந்த பான் இந்தியா படமாக இருக்கும். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருக்கிறது” என்றார்.  மேலும் அந்த பேட்டியில் அமீர் கான் நடிப்பதாக உலா வந்த தகவல் குறித்து பேசுகையில், “படத்தில் யார், யார் இருக்கிறார்கள் என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் தெரிவிக்க வேண்டும். அதனால் நான் எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

சார்ந்த செய்திகள்