பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்திய படங்களான பாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் 'கே.ஜி.எஃ ப் 2' படம் இணைந்துள்ளது.
இதனிடையே 'கே.ஜி.எஃப்' இரண்டாம் பாகத்தில் மூன்றாம் பாகத்திற்கான அப்டேட் கொடுக்கப்பட்டிருந்து. இதனால் 'கே.ஜி.எஃப் 3' குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் முதல் கட்ட பணிகளை படக்குழு தொடங்கி விட்டதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மார்வெல்ஸ் படங்களை போல அடுத்தடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டுள்ளோம். பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கும் சாலார் படம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் முடிந்து விடும், அதன் பிறகு 'கே.ஜி எஃப்' மூன்றாம் பாகத்தின் பணிகளை தொடங்குவோம். இப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் எனக் கூறியுள்ளார்.