Skip to main content

சீனாவில் அமோக விலைக்கு விற்ற தமிழ் திரைப்படம் !

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
kennadi club

 

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை கதைதான் ராஜா (Content is King) மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவுள்ள "கென்னடி கிளப்" படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்படும் படமாக நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது "கென்னடி கிளப்" படம். இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்