தன் உடம்பை குறைப்பதற்காக சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புகொண்டார். இதையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.

முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ’பெண்குயின்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.