Skip to main content

எம்.ஜி.ஆர் லதா குறித்து நான் ஏன் பேசினேன்...

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

அமெரிக்கா வாழ் தமிழராக இருப்பவர் ஆரோக்கியசாமி கிளமென்ட். இவர் தற்போது ‘முடிவில்லா புன்னகை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, பாடல் மற்றும் தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன்.
 

kasthuri

 

இந்தப் படத்தில் ஹீரோவாக டிட்டோ அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரக்ஷிதா நடிக்கிறார். காமெடி வில்லனாக கூல் சுரேஷ் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த வாரம் எம்ஜிஆர் மற்றும் லதா ஆகியோரை பற்றி அவர் ட்விட்டரில் கூறிய சர்ச்சை கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
 

க


“மக்களுடைய குற்றங்களுக்கு சினிமாவை அளவுகோளாக வைத்து சினிமாவை குற்றம் சாட்டுவது நாம் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திதான் ஆக வேண்டும். அதற்கு கண்டிப்பாக பத்திரிகை சொந்தங்கள் துணை நிற்க வேண்டும். ஒரு சுவராஸ்யத்திற்காக சினிமாவை கொச்சையாக எழுதவது என்பது சரி, ஆனால் அதில் எது கொச்சை என்பதிலேயே வேறுபாடு இருக்கிறது. இதைதான் நான் ஒரு வாரமாக கூறை மேல் நின்று கொண்டு கத்துகிறேன். காதல் காட்சிகளில் வாத்தியார் நடித்தார் என்று சொன்னால் கொச்சையா? அப்படி அது கொச்சையா இருந்திருந்தால் நடித்திருப்பாரா? அதை பல லட்சம் பேர் பார்த்து ரசித்திருப்பார்களா? இதுபோன்ற பாசாங்குகளை உடைக்க வேண்டும். அதற்கு ஊடகங்களால் மட்டும்தான் முடியும். அந்த பாசாங்கை ஒழிக்க கூடிய பொறுப்பும் உங்களிடம்தான் இருக்கிறது” என்று பேசியுள்ளார். 

சார்ந்த செய்திகள்