Skip to main content

“நம் நிலத்தை யார் பறித்தார்கள் என்பது முக்கியமில்லை”- பாஜக, அதிமுகவை கலாய்த்து தள்ளிய கரு.பழனியப்பன்

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா சார்லி, ஆனந்த்ராஜ், ரவிமரியா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கூர்கா . 4 மங்கி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. எஸ் பி பாலசுப்பிரமணியம், சித்தார்த், கரு.பழனியப்பன், யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் .
 

karu.palaniyappan

 

 

அப்போது பேசிய கரு.பழனியப்பன், “ராஜராஜன் காலம் முடிந்துவிட்டது. இருண்ட காலம் களப்பிரர் காலமா, ராஜராஜன் காலமா என்பதை வரலாற்று ஆசிரியர்கள் தீர்மானித்துவிட்டுப் போகிறார்கள். வாழும் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், தஞ்சாவூரில் மீத்தேன் என்ற ஒன்றை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை திரும்பிப் பாருங்கள், ராஜராஜனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நம் நிலத்தை யார் பறித்தார்கள் என்பது முக்கியமில்லை. நம் கண் முன்னால் ஒருத்தன் பறித்துக் கொண்டே இருக்கிறான். அவனை கவனிக்காமல் ராஜராஜன் பற்றிப் பேசுவது முக்கியமில்லை.
 

சித்தார்த் மற்றும் மயில்சாமி இருவரும் சமூகக் கருத்துகளை பேசிக்கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை செய்யாதவர்கள், ஏன் இதனை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். வரலாற்றில் 30 கோடி பேர் வாழ்ந்த இந்தியாவில் சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் 3 லட்சம் பேர் தான். அப்புறம் அதனை 30 கோடி பேர் அனுபவித்தார்கள். ஆகவே, கொஞ்சம் பேர் கத்திக் கொண்டிருப்பார்கள். அப்படி நாம் கத்திக் கொண்டே இருப்பது அவசியம்.
 

கடந்த 5 ஆண்டுகளாக சவுக்கிதார்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார்கள். அதே போல் இந்த 'கூர்கா'வும் நம்மை மகிழ்விப்பார். இன்னுமொரு 5 ஆண்டுகள் சவுக்கிதார்கள் நம்மை மகிழ்விக்கப் போகிறார்கள். இன்று காலை அனைத்து பேப்பரில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தது தான் தலைப்புச் செய்தி. அதற்கு கீழேயே தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அவசர ஆலோசனைக் கூட்டம் என்ற செய்தி இருந்தது. அந்தச் செய்திக்குள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார் என்பதும் இருந்தது. இவர்கள் எல்லாம் சவுக்கிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்