Skip to main content

11 வருட காதலியை கரம்பிடிக்கும் ‘வலிமை’ பட வில்லன்!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Kartikeya Gummakonda

 

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்க, வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். தெலுங்கில் பிரபல நடிகராக அறியப்படும் கார்த்திகேயாவிற்கு தமிழில் இது அறிமுகப் படமாகும். இவரும் லோஹிதா ரெட்டி என்பவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்துவந்தனர். இந்நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடைபெற்றுள்ளது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழல் என்பதால் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

 

தன்னுடைய நீண்டநாள் காதலியைக் கரம் பிடிப்பது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திகேயா, கடந்த 2010ஆம் ஆண்டு என்.ஐ.டி. வாரங்கல்லில் இருவரும் முதன்முறையாக சந்தித்துக்கொண்டதாகவும், தன்னுடைய நெருங்கிய தோழி தற்போது வாழ்க்கைத் துணையாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.    

 

 

சார்ந்த செய்திகள்