Skip to main content

"100 மார்க் வாங்குவதை விட 50 மார்க் வாங்குவது விலைமதிப்பற்றது" - கார்த்தி

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

karthi latest speech about students

 

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 1979-ல் ஆரம்பித்த இக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவை தத்தெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா நடத்தப்பட்ட நிலையில் அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

இந்நிகழ்வில் பேசிய கார்த்தி, "இப்போ இருக்கிற காலகட்டம் ஒரு நல்ல காலகட்டம். கல்வியின் முக்கியத்துவம் எல்லாருக்கும் தெரியுது. குறைந்த சம்பளம் வாங்கும் பெற்றோர் கூட எப்படியாவது தன் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறாங்க. கல்வி அவசியமாக இருக்கு. 70 வருஷத்துக்கு முன்னாடி அப்படி இல்லை. ஏனென்றால், வருஷத்துக்கு 2 தடவை தான் மலை பெய்யும். ராகி, கம்பு தான் விளையும். அப்படி இருக்கிற ஊரில் ஒருத்தன் உயிரோடு இருந்தாலே பெரிய விஷயம். அந்த சூழலில் கல்வி என்பது அப்போது முக்கியமாகவே இல்லை. 

 

அப்படிப்பட்ட ஊரில் ஏதாவது படிக்க வேண்டும் என்றும் நினைச்சால், திண்ணை பள்ளிக்கூடம் இருக்கும். ஊரில் பூஜை செய்றவங்க தான் அங்கு சொல்லி கொடுப்பாங்க. அங்கே கொஞ்சம் கத்துக்கிட்டு, அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்றால் பக்கத்துல பள்ளிக்கூடம் கிடையாது. 3 கிலோமீட்டர் தள்ளி போய் 1 ஆசிரியர் பள்ளிக்கூடம் இருக்கும். அவர் முறையாக கூட படிச்சிருக்க மாட்டார். பிறகு மேற்படிப்புக்கு 30 பசங்கள படிக்கவச்சா... 10வது வரதுக்குள்ள 10 பேர் தான் இருப்பாங்க. 1 ஆள் 10வது பாஸ் பண்ணுவதே பெரிய விஷயம். அவனும் மேற்படிப்புக்கு போகவேண்டும் என்றால் யாரவது ஒருவர் உதவி பண்ண வேண்டும். கல்வியே முக்கியமில்லை என்ற போது யார் படிக்க வைப்பார். யாரவது படிக்க வைத்தால் வாழ்க்கை முழுவதும் அடிமையாய் இருந்து விடுகிறேன் என கடிதம் எழுதி வைக்கிற அளவுக்கு  அந்த மாணவர் போக... பிறகு எங்கிருந்தோ வந்த மாமா அவரை படிக்க வைக்கிறார். 

 

நமக்கு என்ன தெரியும், எதைப் பிடிக்கும்... அதை சிறப்பாக பண்ண வேண்டும் என்பது தான் மிக அவசியமாக இருக்கு. அப்படி செய்தால்தான் பெரிய அளவும் வர முடியுது. பின்பு ஒரு பையன் படிச்சுவிட்டால் அவனுடைய தலைமுறையே நல்லாருக்கும் என்று தெரிய வருது. அப்படி தான் எங்க அப்பா மாமா மூலமா படிக்க வச்சு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். கல்வியை கொடுத்தோம் என்றால் அதை விட பெரிய செல்வம் எதுவுமே இல்லை. 

 

அதனால் கல்வி ரொம்ப முக்கியமானது என்று முடிவு செய்து அப்பாவின் 100வது பட விழாவில் எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்டது தான் இந்த சிவகுமார் கல்வி அறக்கட்டளை. முதலில் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மட்டும் விருது விளக்கப்பட்டது. பின்பு அகரம் தத்தெடுத்ததற்கு பிறகு அறிவுக்கண் திறந்து, எந்த இடத்தில இருந்து ஒரு பையன் படிக்கிறான் என்பது அவசியமாக இருக்கு. சென்னையில் டியூஷன் சென்று மார்க் வாங்குவதற்கும் மலைப்பகுதியில் இருந்து 4 கிமீ சென்று படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. சென்னையில படிக்கிற மாணவன் 100 மார்க் வாங்குவதை விட மலைப்பகுதி மாணவன் 50 மார்க் வாங்குவது விலைமதிப்பற்றது. இரண்டையும் சரி என ஒப்பீடு செய்ய முடியாது. அதனால் அந்த மாதிரி பசங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசளிப்பதாக மாற்றம் செய்தோம்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்